சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள கற்பகம் அவென்யூவில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பட்டினம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்றிரவு (ஆக.14) அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், 28 நபர்கள் சேர்ந்து சுமார் ரூ. 9.50 லட்சம் வைத்து சூதாட்டம் விளையாடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 28 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதன் பின் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 26 பேரில், இருவர் அதிமுக நிர்வாகிகள் என்பது தெரியவந்தது. அதில், செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக நிர்வாகி என்பதும் மாதவரத்தை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை நிர்வாகி என்பதும் தெரியவந்தது.