சென்னை:நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. இதனால், சில பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனை மின்மோட்டார்களை வைத்து அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டுள்ளது.
காலை முதல் 52 மரங்கள் விழுந்துள்ளன. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டுவரும் 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ஆறு சுரங்கப்பாதைகள் என 22 சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.