இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், “ஐஐடி, எய்ம்ஸ், ஐஐஎம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக முறைப்படுத்த தமிழ்நாடு அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியறுத்தும்.
27% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வலியுறுத்துவோம் - தமிழ்நாடு அரசு - 27 விழுக்காடு இட ஒதுக்கீடு
உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக முறைப்படுத்த வலியுறுத்துவோம் எனப் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை
அரசுத் துறைகளில் வழங்கும் இட ஒதுக்கீட்டைப் போல தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்குத் தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.
அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்துவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.