தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 27 பேருக்கு கரோனா பாதிப்பு...! - தமிழ்நாடு கரோனா பாதிப்பு

காந்த 24 மணி வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவர் உட்பட 27 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

corona in tamil nadu  corona update  tamil nadu corona  tamil nadu covid update  கரோனா பாதிப்பு  தமிழ்நாடு கரோனா பாதிப்பு  தமிழ்நாட்டில் கரோனா நிலவரம்
கரோனா

By

Published : Apr 18, 2022, 8:28 PM IST

சென்னை:பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபரத் தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 322 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 26 நபர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என 27 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 576 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 53 ஆயிரத்து 290 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்த 26 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 33 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 15 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 4 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் மூன்று நபர்களுக்கும் மதுரை சிவகங்கை திருவள்ளூர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் சர்வதேச விமானத்தின் மூலம் வந்த ஒரு நபருக்கும் என 27 நபர்கள் புதிதாக ஒரு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் ஒருவருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. சென்னையில் 103 நபர்களும், செங்கல்பட்டில் 37 நபர்களும் கோயம்புத்தூரில் 19 நபர்களும் என 23 மாவட்டங்களில் 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details