தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு 4ஆது இடம்: கல்வியில் பின்தங்கிய 27 மாவட்டங்கள் - Tamil Nadu lagging behind in education

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு 4வது இடம்
தமிழ்நாடு 4வது இடம்

By

Published : Aug 10, 2021, 3:06 PM IST

சென்னை: இந்திய அளவில் கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது என பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவால், நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கல்வியில் பின்தங்கிய 27 மாவட்டங்கள்

அதன்படி கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் அதிகம் கொண்ட உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இந்திய அளவில் நான்காவது இடம் வகிக்கிறது.

தமிழ்நாட்டில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி, உள்ளிட்ட 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக பல்கலைக்கழக மானிய குழு தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சராசரியில் தமிழ்நாடு 50 விழுக்காடுடன் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரெய்டுக்கு பதில் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றலாம் - பொள்ளாச்சி ஜெயராமன்

ABOUT THE AUTHOR

...view details