சென்னை:தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவிலிருந்து வந்த இரண்டு நபர்கள், குவைத் , சிங்கப்பூர் , ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த நபர்கள் உட்பட 2,671 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 62 லட்சத்து 47 ஆயிரத்து 613 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 34 லட்சத்து 98 ஆயிரத்து 992 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2516 பேர் குணமடைந்துள்ளனர்; இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,42,122 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக சென்னையில் 844 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 465 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 118 நபர்களுக்கும், திருவள்ளூரில் 161 நபர்களுக்கும், திருநெல்வேலியில் 112 நபர்களுக்கும் என 2,671 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.சென்னையில் அதிகரித்து வந்த கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்; TET தேர்வில் 28,984 பேர் தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை தகவல்