சென்னை:தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 2,662 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 77 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி கரோனா தொற்றுக்கு இறந்துள்ளார்.
பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜூலை 05) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,188 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்த 2,658 நபர்களுக்கும் என 2,662 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 61 லட்சத்து 21 ஆயிரத்து 150 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34,88,091 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.