சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜூலை 4) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 30 ஆயிரத்து 31 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 2,652 நபர்களுக்கும், ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் என 2,654 நபர்களுக்கும் மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 60 லட்சத்து 94 ஆயிரத்து 962 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 34 லட்சத்து 85 ஆயிரத்து 429 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது.
அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,543 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 787 என உயர்ந்துள்ளது.