தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி: தமிழ்நாடு சிறைகளிலிருந்து 2,642 விசாரணைக் கைதிகள் விடுவிப்பு! - minister c v shanmugam

சென்னை: தமிழ்நாடு சிறைச்சாலைகளில் கரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,642 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

கரோனா எதிரொலி
கரோனா எதிரொலி

By

Published : Mar 27, 2020, 8:42 PM IST

சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட உலக நாடுகளைப் பயமுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 35 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த வைரஸ் மக்களிடையே பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு சிறைச் சாலைகளில் உள்ள 2,642 விசாரணைக் கைதிகளை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்துள்ளார். பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கும் பரோல் நீட்டிப்பு செய்வது தொடர்பாகவும், தற்போது பரோல் கேட்கும் கைதிகளை அவர்களின் குற்றத்தன்மையை ஆராய்ந்து பரோல் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலத்து வருகிறது.

வெளியிலிருந்து சிறைக்கு வரும் கைதிகள் உரிய மருத்துவப் பரிசோதனைகளுடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :தனிமையை கடைபிடியுங்கள் கரோனா காணாமல் போகும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details