தமிழ்நாட்டில் 46 ஐபிஎஸ் அலுவலர்கள் நேற்று (ஜுன்.5) இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று (ஜுன்.6) மேலும் 26 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 26 ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்! - 26 IPS officers transferred in Tamil Nadu

10:24 June 06
தமிழ்நாட்டில் மேலும் 26 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில் குறிப்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாக பொன்னி, மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக சுஜீத்குமார், காவல்துறை தலைமையக உதவி ஐஜியாக துரை, காவல்துறை நலப்பிரிவு உதவி ஐஜியாக சம்பத்குமார், மனித உரிமைகள் ஆணையத்தின் எஸ்பியாக சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதைப்போல, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக தீபா சத்யன், சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மகேஷ் குமார், சென்னை பிரிவு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக பெருமாள், மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக பாஸ்கரன், சென்னை பிரிவு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக ஸ்டாலின் உட்பட 26 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய குடிமக்களின் ஆரோக்கியத்தைவிட மத்திய விஸ்டா திட்டம் முக்கியமா?'