தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து - chennai news

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதால், சென்னை விமானநிலையத்தில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச விமானங்கள் ரத்து
சர்வதேச விமானங்கள் ரத்து

By

Published : Mar 16, 2020, 11:26 AM IST

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால், சென்னை சா்வதேச விமான நிலையம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், ஒரே நாளில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:

இலங்கைக்கு செல்லும் மூன்று விமானங்கள், குவைத்துக்கு செல்லும் மூன்று விமானங்கள், தோகா, சிங்கப்பூா், ஜெர்மனி, துபாய், மஸ்கட், ஹாங்காங், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப் போலவே, சென்னையிலிருந்து இந்த நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் 13 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கொரோனா முன்னெச்சரிக்கை : கேரளா வாகனங்கள் சோதனைக்கு ஒத்துழைப்பதில்லையா?

ABOUT THE AUTHOR

...view details