தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்புள்ள முகவர்களின் எண்ணிக்கை 26-ஐ கடந்தது - corona updates

சென்னை: தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், கரோனா தொற்று உள்ள முகவர்களின் எண்ணிக்கை 26-ஐ கடந்துள்ளது.

covid 19 positive
covid 19 positive

By

Published : May 1, 2021, 5:38 PM IST

இன்றைய தினம் சைதாப்பேட்டை தொகுதிக்கு விண்ணப்பத்த முகவர்களில் 16 பேருக்கு கரோனா தொற்று உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரி தொகுதியில் எட்டு பேருக்கு தொற்று என சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட மாதிரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் முதல் பரிசோதனையில் எடுக்கப்பட்ட 350 மாதிரிகளில், நேற்றைய தினம் (ஏப்.30) இரண்டு பேருக்கு தொற்று உள்ளதாக கூறப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 20-ஐ தொட்டுள்ளது. மற்ற தொகுதிகளின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான கரோனா தொற்று முடிவுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசியல் கட்சியினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், கரோனா தொற்று உள்ள முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ரெம்டெசிவிர் மருந்து பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை'

ABOUT THE AUTHOR

...view details