தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் 25ஆம் ஆண்டு நினைவு நாளில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை இயக்குனர் திரிபாதி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கடலோர பாதுகாப்பு குழுமத்தின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
சென்னை: கடலோர பாதுகாப்பு குழுமத்தின் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காவல்துறை இயக்குனர் திரிபாதி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கடலோர பாதுகாப்பு குழுமத்தின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி...
கடலோர மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகள்,மீனவர் சிறைபிடிப்பு, போதைப் பொருள் கடத்தல், கடல் எல்லை, போன்றவைகள் பற்றிய கேள்விகளை மாணவர்கள் எழுப்பினர். இதற்கு திரிபாதி காவல்துறையின் செயல்பாடு, சட்டதிட்ட நடைமுறைகளை பற்றி பதில் அளித்தார்.
மேலும் மாணவர்களாகிய நீங்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.