தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பயிற்சி மையத்தில் படித்த 2583 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி!

சென்னை: இளங்கலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேர தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையத்தில் படித்த 2583 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

By

Published : Jun 9, 2019, 9:54 PM IST

neet exam

சென்னை, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வினை எழுதி தகுதிப்பெற வேண்டும். இத்தேர்வு 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அப்போது தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 412 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சியும், அதனைத் தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதிய மாணவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 45,336 பேர் தகுதிப்பெற்றனர். அப்போது மாணவர்களுக்கு தகுதி மதிப்பெண்களாக 119 முதல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் இட ஒதுக்கீட்டில் 96 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்களாக அறிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டிற்கான நீட் தேர்விற்காக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 412 மையங்களில் 11, 12 ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் 13,741 மாணவர்களுக்கும், ஆங்கில வழியில் படிக்கும் 5,939 மாணவர்களுக்கும் என 19,680 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் படித்த 7,088 மாணவர்களும், ஆங்கில வழியில் படித்த 1,462 மாணவர்களும் என 8,550 மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்தனர்.

நீட் தேர்வு முடிவுகள்

அதேபோல் அரசு உதவிப்பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்த 3120 மாணவர்களும், ஆங்கில வழியில் படித்த 3259 மாணவர்களும் என 14,929 மாணவர்கள் தேர்வினை மே மாதம் 5 ந் தேதி எழுதினர். இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்வினை 14,10,755 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 7,97,042 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வினை எழுதிய 1,23,078 மாணவர்களில் 59,785 மாணவர்கள் தகுதிப்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சுருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களில் பொதுப்பிரிவில் 701 முதல் 134 மதிப்பெண்களும், மற்ற வகுப்பினர் 107 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 2583 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். அவர்களில் தமிழ் வழியில் படித்த அரசுப்பள்ளி மாணவர்கள் 900 பேரும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் 514 பேரும், ஆங்கில வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 257 மாணவர்களும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் 912 பேரும் தகுதிப்பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள்

அவர்களில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் யாரும் 400 மதிப்பெண்கள் பெறவில்லை. அரசு உதவிப்பெறும் பள்ளியில் ஆங்கில வழியில் படித்த 3 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 300 முதல் 400 மதிப்பெண்கள் வரையில் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் படித்த 2 மாணவர்களும், அரசு உதவிப்பெறும் பள்ளியில் படித்த 4 மாணவர்களும், ஆங்கில வழியில் படித்த 2 மாணவர்களும், அரசு உதவிப்பெறும் பள்ளியில் படித்த 21 மாணவர்களும் என 29 மாணவர்கள் பெற்றுள்ளனர். 300 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாணவர்கள் மட்டுமே மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தாலும், அவர்களில் எத்தனை பேருக்கு இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்பது கலந்தாய்விற்கு பின்னரே இறுதியாக தெரியும்.

ABOUT THE AUTHOR

...view details