சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலின்படி, 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 12036 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 252 நபர்களுக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்த தலா ஒருவருக்கும், கேரளாவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 255 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 397 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 57 ஆயிரத்து 637 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 1,453 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணம் அடைந்த 134 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 159 உயர்ந்துள்ளது.