சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,537 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று (ஜூலை10) புதிதாக 33 ஆயிரத்து 616 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், லண்டனிலிருந்து வந்த 2 நபர்கள் உட்பட மேலும் 2,537 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 62 லட்சத்து 81 ஆயிரத்து 229 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.