தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழ்நாட்டில் நேற்று (ஏப். 24) ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மது விற்பனை
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 252 கோடிக்கு மது விற்பனை!

By

Published : Apr 25, 2021, 2:14 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (ஏப். 25) முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று (ஏப். 24) டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.58.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடிக்கு நேற்று மது விற்பனை நடந்துள்ளது.

அதேபோல் திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.48.32 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.47.79 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாஸ்மாக் கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான கடைகளில் கூட்டம் முண்டியடித்ததால் தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் இருந்ததாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு: அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!

ABOUT THE AUTHOR

...view details