சென்னை:தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையின்கீழ் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் புதிதாக 25 தொடக்கப்பள்ளிகளும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசு உத்தரவிடுகிறது.
2020-21ஆம் கல்வியாண்டில் குடியிருப்புப்பகுதிகளில் 25 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. 10 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயரத்தப்படுகிறது. இந்தப் பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் - பாப்பான்குளம், செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் கிழக்கு, வடக்கு, தருமபுரி மாவட்டம் - பெரிய கொல்லப்பட்டி, ஈரோடு மாவட்டம் - பொரசமேட்டுப்புத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் - வெள்ளையகவுண்டம்பட்டி, வி.கொத்தம்பட்டி, புறகரைப்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் - செங்கழநீரோடை, ராணிப்பேட்டை மாவட்டம் - அருந்ததிப்பாளையம், சேலம் மாவட்டம் - பாப்பாத்திக்காடு, சிவகங்கை மாவட்டம் - சோனைப்பட்டி, வி.புதுப்பட்டி, அலங்கம்பட்டி, தேனி மாவட்டம் - போ.நாகலாபுரம், தூத்துக்குடி மாவட்டம் - இனாம்மணியாட்சி, சின்னவநாயக்கன்பட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - அமையபுரம், மணமேடு கிராமம், திருப்பத்தூர் மாவட்டம் - செட்டேரி, திருவண்ணாமலை மாவட்டம் - இருளர் குடிசை, வேலூர் மாவட்டம் - தானிமரத்தூர், பெரிய பனப்பாறை, விருதுநகர் மாவட்டம் - ஸ்டேனர்டு காலனி, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் புதியதாக தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப்பள்ளிகள் - பள்ளிக்கல்வித்துறை - School
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையின்கீழ் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
![நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப்பள்ளிகள் - பள்ளிக்கல்வித்துறை நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப்பள்ளிகள் - பள்ளிக்கல்வித்துறை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10210415-816-10210415-1610434641688.jpg)
நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப்பள்ளிகள் - பள்ளிக்கல்வித்துறை