தமிழ்நாட்டில் புதிதாக இன்று 2,487 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 74 ஆயிரத்து 496 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 2,487 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததை கண்டறிய முடிந்தது.
தமிழ்நாட்டில் 99 லட்சத்து 73 ஆயிரத்து ஐந்து நபர்களுக்கு 12 லட்சத்து 45 ஆயிரத்து 248 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம் ஏழு லட்சத்து 34 ஆயிரத்து 429 நபர்கள் வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதை உறுதிசெய்ய முடிந்தது. அவர்களில் தற்போது 19 ஆயிரத்து 154 நபர்கள் மட்டுமே மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் குணமடைந்த 2,504 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்து நான்காயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் கரோனா தொற்றினால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 244 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிதாக இன்று 657 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னை - 2,02,495
செங்கல்பட்டு -44,296
கோயம்புத்தூர்- 4,4209
திருவள்ளூர் -38,323
சேலம் -27,721
காஞ்சிபுரம் -25,907
கடலூர் -23,382
மதுரை - 18,900
வேலூர்- 18150
திருவண்ணாமலை - 17797
தேனி- 16299
விருதுநகர் - 15506
தஞ்சாவூர் - 15544
தூத்துக்குடி - 15198
ராணிப்பேட்டை - 15008
கன்னியாகுமரி -15,069
திருநெல்வேலி - 14313