தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல்: ரூ.24.75 லட்சம் அபராதம் விதிப்பு!

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் 15,029 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.24.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் 24.75  லட்சம் அபராதம் விதிப்பு!
தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் 24.75 லட்சம் அபராதம் விதிப்பு!

By

Published : May 3, 2022, 10:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்திவுள்ளது.

இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் - ரூ.24.75 லட்சம் அபராதம் விதிப்பு!

அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 35,635 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 15,029 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 24,75,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மரத்திற்கு நடிகர் விவேக் பெயர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

ABOUT THE AUTHOR

...view details