சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூலை 15ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 32 ஆயிரத்து 164 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,311 நபர்களுக்கும் அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து வந்த ஒருவருக்கும் என 2,312 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 64 லட்சத்து 29 ஆயிரத்து 390 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனால் 35 லட்சத்து 13 ஆயிரத்து 121 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,682 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 605 என உயர்ந்துள்ளது.