சென்னையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை 3 லட்சத்து 45 ஆயிரத்து 966 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 லட்சத்து 9 ஆயிரத்து 233 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 ஆயிரத்து 913 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
வழக்கமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சென்னையில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று (மே 2) வாக்கு எண்ணிக்கை மற்றும் முழு ஊரடங்கு காரணமாக 2 ஆயிரத்து 251 நபர்கள் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அண்ணா நகர் - 3192
கோடம்பாக்கம் - 3712
தேனாம்பேட்டை - 3287
ராயபுரம் - 1903
அடையாறு - 2771