சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, ரயில்வே ஊழியர் காமேஷ்வரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதில் 22 பேரை கடந்த நவம்பர் 21ஆம் தேதி கைது செய்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் 22 பேர் ஆஜர்! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
சென்னை: வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 22 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கைதான 22 பேர், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக் முன்பு இன்று (பிப்.16) ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்குவதற்கு ஏதுவாக, வழக்கின் விசாரணையை நீதிபதி பிப்.24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கைதிகளின் ஊதியத்தில் நிவாரண நிதி பிடித்தம்: பாதிக்கப்பட்டோருக்கு முறையாக வழங்கப்படுகிறதா?