இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், "இளைஞர்களின் எழுச்சி நாயகரான தீரன் சின்னமலையின் புகழ் பாடும் வகையில் - முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு கிண்டியில் சிலை வைக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
தீரன் சின்னமலை நினைவு தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை - சங்ககிரிக் கோட்டை
தீரன் சின்னமலை 216 ஆம் நினைவு நாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலை
"ஓடாநிலையில் கோட்டை அமைத்துப் போரிட்ட விடுதலை வீரர், சங்ககிரிக் கோட்டையில் ஆடிப்பெருக்கு நாளில் வீரமரணம் அடைந்த தீரன் சின்னமலையின் 216-ஆம் நினைவுநாளான இன்று, சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்" எனறும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :தீரன் சின்னமலை நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை
Last Updated : Aug 3, 2021, 12:25 PM IST