தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2,144 குடிமைப் பொருள் வழங்கல் வழக்குகள் பதிவு - சென்னை அண்மைச் செய்திகள்

கடந்த மூன்று மாதங்களில் இரண்டாயிரத்து 144 வழக்குகள் பதியப்பட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,144 குடிமைப் பொருள் வழங்கல் வழக்குகள் பதிவு!
2,144 குடிமைப் பொருள் வழங்கல் வழக்குகள் பதிவு!

By

Published : Aug 26, 2021, 6:41 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 25) கூட்டுறவுத் துறையின் மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு துறையின் அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலளித்துப் பேசினார்.

அப்போது, நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது முதல், தற்போதுவரை பதிவுசெய்யப்பட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை வழக்குகள் குறித்து கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

2,144 வழக்குகள் பதிவு

அதில், “கடந்த மே 7 முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதிவரை இரண்டாயிரத்து 144 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் அரிசி கடத்தல் தொடர்பாக ஆயிரத்து 918 வழக்குகள், மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக 66 வழக்குகள், சமையல் எரிவாயு உருளைகளை வர்த்தகத்திற்குப் பயன்படுத்தியதற்கு 109 வழக்குகள், இதர இனங்களில் 51 வழக்குகள் உள்ளிட்டவை பதிவுசெய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு - திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details