தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரு.விக.நகரில் 210 பேருக்கு கரோனா- சென்னை மாநகராட்சி - corona virus

சென்னை: திரு.விக.நகரில் இதுவரை 210 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கரோனா
கரோனா

By

Published : May 1, 2020, 11:56 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மண்டலம் வாரியாக காரோனா பாதிப்புப் பகுதிகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி திரு.வி.க நகர் மண்டலத்தில் 210 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ராயபுரத்தில் 199 பேருக்கும், தேனாம்பேட்டையில் 105 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 97 பேருக்கும், அண்ணா நகரில் 86 பேருக்கும், தண்டடையார்பேட்டையில் 77 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அதேபோல்,

  • திருவொற்றியூர்- 16 பேர்
  • மணலி- 2 பேர்
  • மாதவரம் -4 பேர்
  • அம்பத்தூர்-27 பேர்
  • வளசரவாக்கம்-40 பேர்
  • ஆலந்தூர்-9 பேர்
  • அடையார்-20 பேர்
  • பெருங்குடி - 9 பேர்
  • சோழிங்கநல்லூர்-3 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும்,15 பேர் இறந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை மாநகரில் உள்ள பள்ளியில் கரோனா மையம் - ஆட்சியர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details