தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தம்..! - Maintenance work

திருவள்ளூர்: வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல்நிலை 2ஆவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தம்

By

Published : Jul 24, 2019, 9:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் வட சென்னை அனல் மின்நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன. இதில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் என, 630 மெகாவாட் மின்சாரம், 2ஆவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தம்

இந்த நிலையில், முதல்நிலை 2ஆவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் நிலையில் 1620 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details