சென்னை ரெட்டேரியில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புபிரிவு காவல்துறையினக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர பிரதேச மாநிலத்தின் பதிவு எண் கொண்ட வேன் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்ததில் சர்க்கரைவல்லிகிழங்கு மற்றும் ப்ளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றில் மறைத்து வைத்து சுமார் 210 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
வேனில் கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (28) என்ற நபரை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து சென்னையில் சப்ளை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.