தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர தின விழா 2023: தமிழக காவல் துறையின் 21 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது! - independence day celebration 2023

Independence day 2023: மத்திய அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறையின் 21 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது.

தமிழக காவல்துறையின் 21 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது
தமிழக காவல்துறையின் 21 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

By

Published : Aug 15, 2023, 7:05 AM IST

சென்னை:அனைத்திந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை விருதுகள் வழங்கப்படுகின்றன. காவல் துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு, தமிழ்நாடு காவல் துறையின் 21 அலுவலர்களுக்கு ‘இந்திய குடியரசுத் தலைவர் விருது’களை அறிவித்துள்ளது. மேலும், இந்திய தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த இரண்டு அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுள்ளன.

தமிழக காவல்துறையின் 21 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், கோயம்புத்தூர் மேற்கு மண்டலம் காவல் துறை தலைவர் பவானிஸ்வரி ஆகிய இருவருக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாராட்டத்தக்கப் பணிக்கான காவல் விருதுகள் தமிழ்நாடு காவல் துறையைச் சார்ந்த 19 அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:சுதந்திர தின விழா கொண்டாட்டம் - திருப்பூரில் உற்பத்தி ஆகும் பேப்பர் தேசிய கொடி, அலங்கார பொருட்களுக்கு அமோக வரவேற்பு!

சென்னை புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தருமபுரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை குற்றப்பிரிவு உதவி ஆணையர் அனந்தராமன், கள்ளக்குறிச்சி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், சென்னை புலனாய்வுத்துறை தனிப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அரிகிருஷ்ணமூர்த்தி,

தமிழக காவல்துறையின் 21 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

பெரம்பலூர் மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தஞ்சாவூர் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துணை கண்காணிப்பாளர் ராஜி, சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் சங்கரலிங்கம், திருச்சி மாநகரம் குற்றப்பிரிவு புலனாய்வு திட்டமிட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோவன், திருநெல்வேலி மாவட்டம் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் ரவீந்திரன்,

தமிழக காவல்துறையின் 21 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் காவல் ஆய்வாளர் திருமலை கொழுந்து, திருப்பூர் மாவட்டம் தனி பிரிவு காவல் ஆய்வாளர் முத்துமாலை, கோவை மாநகரம் உளவு பிரிவு காவல் ஆய்வாளர் புகழ்மாறன், சென்னை தனி பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:77 வது சுதந்திர தினம்: இணையத்தில் வைரலாகும் கட்டிடக் கலைஞர்களின் தேசிய கீதம்!

ABOUT THE AUTHOR

...view details