தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் - Chief Minister Stalin

ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு மட்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

21 மசோதாக்களில்10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
21 மசோதாக்களில்10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

By

Published : Jul 7, 2022, 9:36 AM IST

சென்னை:கடந்த ஜூன் மாத நிலவரப்படி ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. ஆளுநர் ஆர்.என். ரவியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கும்போதெல்லாம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

பல்கலைக்கழக வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான எட்டு மசோதாக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இதையும் படிங்க:நலத்திட்ட உதவிகளை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் திருவண்ணாமலை பயணம்

ABOUT THE AUTHOR

...view details