சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது பல நாடுகளை ஆட்க்கொண்டுவருகிறது. இதனால் இந்தியாவிலும் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறைப் பகுதியில் உள்ள கிராம, மலைவாழ் மக்கள் உணவு பொருள்கள் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு தவித்து வந்தனர். இதுபற்றி தகவலறிந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தனது சொந்த செலவில் சமைப்பதற்குத் தேவையான மளிகை பொருள்கள் காய்கறி வகைகளை கீரிப்பாறை மலை வாழ் மக்கள் வாழ்ந்து வரும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க ஏற்பாடு செய்தார்.