தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளமுடன் வாழ்க - முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து - 2021 new year celebration

சென்னை: நாளை உலகெங்கிலும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

2021-new-year-celebration-greetings-on-tn-cm-edapadi-palanisamy
2021-new-year-celebration-greetings-on-tn-cm-edapadi-palanisamy

By

Published : Dec 31, 2020, 10:40 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நவ்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தொடர்ந்து திகழ்ந்திடவும், வறுமைக் கோட்டிற்கு கீழே எவரும் இல்லை என்ற நிலையை அடைந்திடவும், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

மக்களின் நல்வாழ்விற்காகச் செயல்படுத்திவரும் எண்ணற்றத் திட்டங்களை அனைவரும் சிறப்பாகப் பயன்படுத்தி, வளமும் வலிமையும் மிக்கத் தமிழ்நாட்டைத் தொடர்ந்து முதன்மை மாநிலமாகச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்போம்.

மலரும் இப்புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடியை நிராகரிக்கும் பாஜக ; முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி!

ABOUT THE AUTHOR

...view details