தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி...பயிர்களை சாகுபடி செய்ய 'விதைப்பு சான்றிதழ்' அவசியம் - உழவர் நலத்துறை - விதைப்பு சான்றிதழ்

பயிர்களைக் காப்பீடு செய்யவதற்கு, பிப்ரவரி 15 ஆம் தேதியோடு கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் இப்பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள், திட்ட விதிமுறைகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கலுக்கு பதிலாக ’விதைப்பு சான்றிதழ்’ பெற வேண்டும் என்று உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 15-ற்கு மேல் பயிர்களை சாகுபடி செய்ய ‘விதைப்பு சான்றிதழ்’ அவசியம் - உழவர் நலத்துறை
பிப்ரவரி 15-ற்கு மேல் பயிர்களை சாகுபடி செய்ய ‘விதைப்பு சான்றிதழ்’ அவசியம் - உழவர் நலத்துறை

By

Published : Feb 13, 2022, 12:55 PM IST

சென்னை:2021 – 2022 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது குளிர் கால பருவ (ராபி) பயிர்களான நவரை, கோடை நெல், நெல் தரிசில் உளுந்து, நெல் தரிசில் பச்சை பயிறு, நெல் தரிசில் பருத்தி, எள், நிலக்கடலை, மக்காச்சோளம், ஆகிய பயிர்கள் காப்பீட்டு செய்யப்பட்டு வருகின்றன. இதில், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் நெல் தரிசில் பயிறு வகைகளை விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர்.

இப்பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று முடிவடையும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் இப்பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள், திட்ட விதிமுறைகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கலுக்கு பதிலாக 'விதைப்பு சான்றிதழ்' பெற்று பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details