மருந்தாளுநர், பிசியோதெரபி, நர்சிங் உள்பட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று (அக். 1) முதல் வரும் 15ஆம் தேதிவரை http://tnmedicalselecction.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார்.
வழக்கமாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்த பிறகு இறுதியாக துணை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு தாமதமாக நடந்த காரணத்தாலும், இன்னும் முடிவுகள் வெளியாகாத நிலையில் இருப்பதாலும் , துணை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு முன்னதாகவே தொடங்குகிறது.