தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று ஒரே நாளில் 20,069 பேருக்கு பூஸ்டர் டோஸ் - சென்னை மாநகராட்சி

சென்னையில் இன்று ஒரே நாளில் 20,069 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Jan 20, 2022, 10:40 PM IST

சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்தப்பட்டு வருகிறது.

அதில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (ஜன.20) நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிர்ணயம் செய்த 100 விழுக்காட்டில் 96 விழுக்காடு இலக்கை எட்டி உள்ளது.

சென்னையில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி சிறப்பு முகாம் 160 மையங்களில் நடைபெற்றது. இதில் 21,000 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த மாநகராட்சி இலக்கு நிர்ணயத்தில் 20,069 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்கள் மாநகராட்சி உதவி எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டுக்கே வந்து செலுத்தப்படும், இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க:கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் சி.வி கணேசன்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details