சென்னை:இன்றைய (மே10) சட்டப்பேரவை கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய திருவிக நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, "திருவிக நகர் சட்டப்பேரவை தொகுதி மண்டலம் 6ஆவது வார்டு 73இல் அமைந்துள்ள புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது.
அங்கு 60 படுக்கைகள் மட்டுமே உள்ளன. அதனை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும்” என்றார். மேலும், “அங்கு சிறப்பு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஆகியோர் பணிக்கு தேவைப்படுகிறார்கள்.
எனவே அவற்றை நிறைவேற்றித் தர ஆவன செய்ய வேண்டும்” எனக் கோரிக்கையை முன்வைத்துப் பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "நகர்ப்புறங்களில் மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்காக தான் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் 708 நகர்ப்புற மருத்துவமனைகள் ஏற்படுத்துவதற்கு அறிவிப்பினை வெளியிட்டார்.