கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், தூய்மைப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளின் பணியாளர்களும், அரசுப்பணியாளர்கள் 50 விழுக்காட்டினரும் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்களுக்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், "ஏற்கனவே அத்தியாவசிய பணியாளர்கள், 50 விழுக்காடு அரசுப் பணியாளர்களுக்கு 175 பேருந்துகள் இயக்கிவருகின்றன.