தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூழ் ஊற்றும் திருவிழா - 20 நபர்களுக்கு கரோனா

கரோனா விதிமுறைகளை மீறி திரு.வி.கா மண்டலத்தில் நடந்த கூழ் ஊற்றும் திருவிழாவில் பங்கேற்ற 20 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 நபர்களுக்கு கரோனா
20 நபர்களுக்கு கரோனா

By

Published : Aug 11, 2021, 10:38 PM IST

சென்னை: கரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 200 நபர்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கரோனா விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் திரு.வி.கா மண்டலத்திலுள்ள வரதம்மாள் கார்டன் தெருவில் கடந்த வாரம் 2 ஆம் தேதி கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவில் முறையாக கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு அதிக அளவில் கரோனா தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

20 நபர்களுக்கு கரோனா


இதுவரை 275 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் தற்போது 20 நபர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அந்தப் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்த இருபது நபர்களில் விக்டோரியா மருத்துவமனையில் பத்து நபர்களும், இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆறு நபர்களும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் இரண்டு நபர்களும், வீட்டு தனிமையில் இரண்டு நபர்களும் இருந்து வருகின்றனர். இவர்களை மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இன்று (ஆக.11) சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,964 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details