துபாயிலிருந்து சென்னைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையைச் சோ்ந்த சங்கா் (50) என்பவா் மீட்பு பயணியாக வந்தாா். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்து அரசு இலவச தங்கும் விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாா்.
மீட்பு விமானத்தில் தங்கம் கடத்திய பயணி - ரூ.20 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்! - 20 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்
சென்னை: துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் சென்னை வந்த பயணியிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு கைக்கடிகாரங்களை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், அவருடைய உடைமைகள் அன்றைய விமானத்தில் வராமல் நேற்று (ஆகஸ்ட் 07) அதிகாலை வந்த மற்றொரு மீட்பு விமானத்தில் வந்தது. சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் அந்த உடமைகளை சோதனையிட்டனர். அதில், ஒரு பேட்டரி பொம்மை கார் இருந்தது. அந்தக் காரின் உள்ளே E வடிவத்திலான தங்க பிளேட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அதன் மொத்த எடை 388 கிராம், அதுமட்டுமில்லாமல் விலை உயா்ந்த நான்கு கைக்கடிகாரங்களும் இருந்தன. தங்கம் மற்றும் கைக்கடிகாரங்களின் சா்வதேச மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்று சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சங்கா் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.