சென்னையில் ஆவடி அருகே வீராபுரத்தில் தண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இது சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோயில் என்பதால் ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருகைதந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு கோயிலைப் பூட்டிவிட்டு அர்ச்சகர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலை கோயிலை திறக்கவந்தபோது கோயில் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர், கோயிலில் 20 கிலோ மதிப்புள்ள முருகப்பெருமானின் வெள்ளி கவசமும், உண்டியலிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
தண்டாயுதபாணி முருகன் கோவில் பின்னர், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்ததில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து கவசத்தைப் எடுப்பதும், உண்டியல் பணத்தைத் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:போட்டோ ஷூட் நிறுவனத்தில் கேமராக்கள் திருட்டு