தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா, ஒமைக்ரான் பரவல் எதிரொலி: 20 விமானங்கள் ரத்து! - 20 flights has been canceled in chennai

கரோனா, ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவுவதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 20 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 20 விமானங்கள் ரத்து
சென்னையில் 20 விமானங்கள் ரத்து

By

Published : Jan 11, 2022, 4:13 PM IST

சென்னை :நாட்டில் கரோனா, ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவுவதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள் பலா் தங்கள் விமான பயணங்களைத் தவிர்த்துவருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவருகிறது.

விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் ஒரு நாளுக்கு வருகை/புறப்பாடு விமானங்கள் 270 வரை இயக்கப்பட்டு, வருகை/புறப்பாடு பயணிகள் எண்ணிக்கை சுமாா் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்துவந்தது. ஆனால் கரோனா தொற்று கடந்த சில நாள்களாகப் பெருமளவு அதிகரித்துவருவதாலும், ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதாலும், பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று வருகை விமானங்கள் 104, புறப்பாடு விமானங்கள் 102, மொத்தம் 206.

20 விமானங்கள் ரத்து

உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை

அதைப்போல் வருகை பயணிகள் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 900, புறப்பாடு பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 100. மொத்த பயணிகள் எண்ணிக்கை 20 ஆயிரம். அதைப்போல் விமானங்களின் எண்ணிக்கை வருகை/புறப்பாடு இன்று 206 மட்டுமே. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த 15 நாள்களில் 270 லிருந்த விமான சேவைகள் 206 ஆகவும், உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாகவும் குறைந்துள்ளன.

இது குறித்து விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், விமான பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் கரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்தாடுவதாலும், அத்தோடு ஒமைக்ரான் பீதியும் மக்களை ஆட்டுவிப்பதாலும் விமான பயணங்களை உள்நாட்டு பயணிகள் புறக்கணிக்கின்றனர்.

சென்னையில் 20 விமானங்கள் ரத்து

20 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் நேற்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகை/புறப்பாடு ஆறு விமானங்கள், கொல்கத்தாவிலிருந்து வருகை/புறப்பாடு 4 விமானங்கள், ஹைதராபாத்திலிருந்து வருகை/புறப்பாடு 4 விமானங்கள், மும்பையிலிருந்து வருகை/புறப்பாடு 2 விமானங்கள், பெங்களூருவிலிருந்து வருகை/புறப்பாடு 2 விமானங்கள், புனேவிலிருந்து வருகை/புறப்பாடு 2 விமானங்கள் ஆகிய 20 விமானங்கள் நேற்று பயணிகள் இல்லாமல் ரத்தாகின. இன்றும் சில விமானங்கள் ரத்தாகக்கூடும்” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், ”கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாகப் பயணிகள் குறைவால் சில விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எனவே உள்நாட்டுப் பயணிகள் விமான டிக்கெட் எடுத்து பயணம் தடைப்பட்டால், இந்த ஆண்டு மாா்ச் 31ஆம் தேதிக்குள் அவா்களுக்கு விருப்பப்பட்ட தேதியில் உள்நாட்டிற்குள் எந்த நகரங்களுக்கும் டிக்கெட்களை மாற்றிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: ”தடுப்பூசி என்னும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்” - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details