தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் 2 ஆண்டுகள் எம்.ஏ. படிப்பு - அடுத்த ஆண்டு முதல் அறிமுகம்! - college admission

சென்னை ஐஐடியில் 2 ஆண்டுகள் எம்.ஏ. படிப்பு வரும் 2023-24 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் எனவும்; இதற்காக தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் எனவும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அறிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் 2 ஆண்டு எம்ஏ படிப்பு  அடுத்த ஆண்டு முதல் அறிமுகம்
சென்னை ஐஐடியில் 2 ஆண்டு எம்ஏ படிப்பு அடுத்த ஆண்டு முதல் அறிமுகம்

By

Published : Jun 21, 2022, 9:48 PM IST

சென்னை:இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையால் (Department of Humanities and Social Sciences) புதிய எம்.ஏ. படிப்புகள் அறிமுகப்படுத்த உள்ளன. அதிகளவிலான மாணவர்களை ஈடுபடுத்துவதும், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும்தான் இதன் நோக்கமாகும்.

மேம்பாட்டுக் கல்வி (Development Studies), ஆங்கிலக் கல்வி (English Studies) ஆகியவை தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளாக இருந்து வருகின்றன. இதற்குப்பதிலாக பொருளாதாரப் (Economics) பாடத்தையும் எம்.ஏ. படிப்பில் இணைத்து, இவை மூன்றையும் இரண்டாண்டு எம்.ஏ. படிப்புக்கான பாடப்பிரிவுகளாக விரிவுபடுத்த இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்தப் பாடப்பிரிவுகள் 2023-ம் கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 25 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். அதிக இடங்களின் அடிப்படையில் சர்வதேச மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மார்ச், ஏப்ரல் 2023-ல் தொடங்கப்பட்டு, ஜூலை 2023-ல் வகுப்புகள் ஆரம்பமாகும். நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இரண்டாண்டு எம்.ஏ. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

வெவ்வேறு பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு எம்.ஏ. படிப்புகளை கிடைக்கச்செய்வதன் மூலம் பலதரப்பட்ட விண்ணப்பதாரர்களை சேர்க்க முடியும்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதாவது, ' மானுடவியல், அறிவியல், வணிகவியல், பொறியியல் போன்ற பலதரப்பட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டப் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எம்.ஏ. படிப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. நவீன உலகில் வெவ்வேறு சவால்களை சந்திக்கவும், எதிர்கொள்ளவும் ஏதுவாக அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு இதுபோன்ற மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் (Humanities and Social Science) வெளிப்பாடு மிக அவசியமான ஒன்றாகும்.

மாணவர்கள் சர்வதேச தயார்நிலை மற்றும் தேசிய கவனத்துடன் களம் சார்ந்த நிபுணர்களாக பயிற்றுவிக்கப்படுவார்கள். சான்றுகள் அடிப்படையிலான கொள்கைப் பகுப்பாய்வுகள், சமூகப் பொருளாதார மேம்பாட்டை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு, தரவு அறிவியல் மற்றும் நிர்வாகம், பருவநிலை மாற்றம், நிலைத்தன்மை, நகரமயமாக்கல் போன்ற தற்காலத்து பிரச்னைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்டப் பல்வேறு தனித்துவ அம்சங்கள் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ளன.

புத்தாக்க பொருளாதாரம் (Economics of Innovation), நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு (Urban Planning and Development), சுகாதாரக் கொள்கை (Health Policy), சுற்றுச்சூழல் மானுடவியல் (Environmental Humanites), பருவநிலைப் பொருளாதாரம் (Climate Economics), தொழில்நுட்பம் மற்றும் கொள்கை (Technology and Policy), கணக்கீட்டு மொழியியல் (Computational Linguistics) போன்ற தற்காலத்திற்கு தேவைப்படும் பாடங்களை உள்ளடக்கியதாக எம்.ஏ. படிப்பின் பாடப்பிரிவுகள் சீரமைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக விதிகளை திருத்த தடை கோரிய மனு நாளை விசாரணை - நடக்குமா பொதுக்குழு ?

ABOUT THE AUTHOR

...view details