புதுச்சேரியில் 2 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு! - Corona cases in Pondicherry
புதுச்சேரி: கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 7 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 590 நபர்கள், காரைக்காலில் 238 நபர்கள், ஏனாமில் 129 நபர்கள், மாஹேவில் 50 நபர்கள் என மொத்தம் 2ஆயிரத்து 7 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 15ஆயிரத்து 562 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 60ஆயிரத்து 424 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனா தொற்றால் புதுச்சேரி மாநிலத்தில் 27 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 45ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 75ஆயிரத்து 24 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.