தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு பணிகளுக்காக இரண்டாயிரம் கூடுதல் மருத்துவர்கள் - அரசு மருத்துவர்கள் சங்கம்

சென்னை: கரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னையில் கூடுதலாக இரண்டாயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

By

Published : Jun 10, 2020, 2:02 PM IST

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் கூடுதலாக மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.

இதனால் தமிழ்நாடு முழுவதும் கோர்ஸ் முடித்த சர்வீஸ் பட்டமேற்படிப்பு மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். அதற்கு முன்னே வாய்வழி உத்தரவாக அனைவரும் சென்னை வந்து அங்கு உள்ள மருத்துவமனைகளை கரோனா பணி செய்யுமாறு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் வழியாக தமிழ்நாடு அரசு 8.6.2020 உத்தரவிட்டது.

விடுவிப்பு ஆணை பின்னர் வழங்கப்படும். உடனடியாக சென்னை செல்லுங்கள் என்று கல்லூரி முதல்வர்கள் சொன்னவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் பெரும்பாலான மருத்துவர்கள் சென்னையில் பணி ஏற்று உள்ளனர்.

வாகன வசதிகளும் இல்லாத நிலையில் கால அவகாசமும் இல்லாத நிலையில், பெரும்பாலான பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் தங்களது பணி பொறுப்பை உணர்ந்து சென்னைக்கு உடனே சென்று பணிகளைத் தொடங்கிய மருத்துவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தலை வணங்குகிறது.

இந்த பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் அனைவரும் கடந்த இரு மாதங்களாகவே அவரவர் கல்லூரிகளில் கரோனா பணி செய்தவர்கள்தான். தமிழ்நாடு அரசும் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று, புதிய ஊர் என்பதால் மருத்துவர்கள் தங்க ஹோட்டல்களும், உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

கரோனா பணி முடிந்தவுடன் இந்த மருத்துவர்களுக்கு அவர்களுடைய சீனியாரிட்டிக்கு ஏற்ப, அவரவர் விரும்பும் இடங்களில் பணியமர்த்த வேண்டும். இந்த கரோனா பணியில் பாதுகாப்பாகவும், கவனமாகவும் பணியாற்றி நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் பின்வரும் கோரிக்கைகளை ஏற்று மருத்துவர்கள் நியமனத்தை அரசு செய்துள்ளது. கோவிட் பணிக்காக கான்ட்ராக்ட் அடிப்படையில் ரூபாய் 40 ஆயிரம் மாத சம்பளத்திற்கு டாக்டர்களை நியமனம் செய்த அரசுக்கு சங்கம் தங்களது அதிருப்தியை தெரிவித்து, கூடுதலான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று இன்று கான்ட்ராக்ட் டாக்டர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சர்வீஸ் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட முடியவில்லை. நிரந்தர பணியிடம் இல்லாத நிலையில், சங்கம் அவர்களையும் கான்ட்ராக்ட் அடிப்படையில் ரூபாய் 25 ஆயிரம் மாத ஊதியத்தில் நியமனம் செய்யலாம் என்று அரசை சங்கம் கேட்டுக் கொண்டது.

அதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சர்வீஸ் பட்டமேற்படிப்பு மருத்துவர்களுடன் இந்த கான்ட்ராக்ட் டாக்டர்கள் சேர்ந்து தற்போது ஏறத்தாழ இரண்டாயிரம் டாக்டர்கள் கரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக ஈடுபடுத்தபடலாம்.

பிற துறைகளின் உதவியுடன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை செவிலியர், ஊழியர்களுடன் கரோனா ஒழிப்பு பணியில் அரசு டாக்டர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் முழுவதுமாக ஈடுபடும்” என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details