குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையிடம் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் செயலாளர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அளித்தப் புகாரில், முறைகேட்டில் ஈடுபட்டு 42 பேர் அரசுப் பணிகளில் உள்ளனர் எனக் கூறியிருந்தது.
அதனைத் தொடர்ந்து இதுசம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த ஜெயராணி ஆகியோரை கைது செய்தனர்.
அரசுப் பணியாளர் தேர்வு நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில், காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் 48 மணி நேரத்திற்கும் மேல் காவல்துறை பாதுகாப்பில் இருந்தால் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்.