சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (ஜனவரி 31) மாநில கல்லூரி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இணைந்து மூன்றாம் ஆண்டு மாணவர்களான சூர்யபிரகாஷ், நவீன் மற்றும் சூர்யா ஆகியோரை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த மூன்று மாணவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பானது. இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் வழக்குபதிவு செய்து வீடியோவில் பதிவான நபர்களின் புகைப்படங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.