தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவி ஆய்வாளரை மிரட்டிய 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்கு - 2 persons arrested for speaking obscenities and threatening to kill the assistant inspector

கோயில் திருவிழாவில் உதவி ஆய்வாளரை மிரட்டிய இரண்டு திமுக நிர்வாகிகள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..!
உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..!

By

Published : Aug 1, 2022, 9:20 PM IST

சென்னை: எம்.ஜி.ஆர் நகர், அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் பாதுகாப்பு பணியில் எம்.ஜி.ஆர் நகர் உதவி ஆய்வாளர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 30ஆம் தேதி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஒரு நபர் நடுவில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது உதவி ஆய்வாளரான ராஜா அந்த நபரை தள்ளி நிற்குமாறு கூறிய போது, தள்ளிதான் நிற்கிறோம் என அந்த நபர் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததால் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல போலீசார் முற்பட்டனர்.

உடனே அங்கு வந்த அவரது நண்பர் ஒருவர் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி, "உன்னை என்ன பண்ணுகிறேன் பாரு, சட்டைய கிழித்து விடுவேன்" என கூறி மிரட்டி சென்றார். இதனையடுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்த போது, திமுக நிர்வாகிகளான கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன் (29) மற்றும் முகப்பேரை சேர்ந்த ரெனால்ட் வின்செண்ட் (32) என்பது தெரியவந்தது. இதில் ரெனால்ட் வின்செண்ட் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக உறுப்பினர்கள் மணிகண்டன் மற்றும் ரெனால்ட் வின்செண்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உதவி ஆய்வாளர் ராஜா பாரதிதாசன் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக உறுப்பினர்கள் மணிகண்டன் மற்றும் ரெனால்ட் மீது பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சர்வதேச செஸ் வீரர்களை ஈர்க்கும் செல்ஃபி ஸ்பாட் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ!

ABOUT THE AUTHOR

...view details