தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லாவரத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் - chennai district news

சென்னை: பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது
கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது

By

Published : Apr 15, 2021, 6:59 PM IST

சென்னை, பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் அதிகரித்து வருவதாக பல்லாவரம் காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்லாவரம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் பல்லாவரம் பழைய சந்தை சாலையில் சந்தேகத்திற்குகிடமான இரண்டு நபர்கள் பிளாஸ்டிக் பையுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களை காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மூட்டையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் அவர்கள் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அக்தர் உசேன் (26), ஜாபர் அலி (24) எனத் தெரியவந்தது.

மேலும் பல்லாவரம்,திரிசூலம், வேல்ஸ் கல்லூரி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதற்காக மேற்கு வங்கத்திலிருந்து ரயில் மூலமாக வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து, சுமார் 21 கிலோ 400 கிராம் கஞ்சாவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details