தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 2.14 லட்சம் வாக்காளர்கள் வரைவுப்பட்டியலில் இருந்து நீக்கம்!

சென்னையில் 2 லட்சம் 14 ஆயிரம் வாக்காளர்கள் வரைவுப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தற்போது வெளியிட்ட வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவருகிறது.

சென்னையில் 2.14 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கம்!
சென்னையில் 2.14 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கம்!

By

Published : Nov 9, 2022, 10:34 PM IST

சென்னை: சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி விசு மகாஜன், இன்று (நவ.9) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரமுகர் முன்னிலையில் வெளியிட்டார்.

மேலும், 2023ஆம் ஆண்டு வாக்காளர் வரைவு பட்டியலின்படி, சென்னையில் மட்டும் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 19 லட்சத்து 15 ஆயிரத்து 611 ஆண் வாக்காளர்களும், 19 லட்சத்து 75 ஆயிரத்து 788 பெண் வாக்காளர்களும் 1058 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 5,994 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை 2 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 3723 வாக்குச்சாவடிகளில் உள்ளது. அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 284ம், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்றத்தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

இதையும் படிங்க: பிரதமர் கூட்டத்திற்கு மாணவர்கள் கட்டாயம்.. திடீரென பின்வாங்கிய கர்நாடக அரசு!

ABOUT THE AUTHOR

...view details