தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை வந்தடைந்த 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள்! - covishield vaccines
சென்னை: புனேவில் இருந்து இரண்டு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமான நிலையம் சென்னை வந்தடைந்தன.
இந்நிலையில், இன்று புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஏறத்தாழ 640 கிலோ எடையில், சுமார் இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை கொண்டு வரப்பட்டன. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, குளிர்சாதன வசதிகொண்ட வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருந்துகள் வைக்கப்படும் என்றும், பின்னர் தடுப்பூசி பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:என் தாயின் வலி பிறருக்கு வரக்கூடாது: ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் உதவும் பெண்!